அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை - கோவையில் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமைச்சர் உதயநிதி கோவையிலிருந்து சாலை மார்க்கமாக ஈரோடு புறப்பட்டுச் சென்றார்.



கோவை: ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த உறுப்பினரான இ.வி.கே.எஸ். இளங்கோவனை சந்திக்கும் நிகழ்வுக்கும், இதர நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஈரோடு செல்கிறார்.



இதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்த அவருக்கு, திமுக தொண்டர்கள் புத்தகங்கள் வழங்கியும் பொன்னாடைகள் வழங்கியும் உற்சாக முழக்கங்களை எழுப்பியும் வரவேற்பு அளித்தனர்.



தொண்டர்களின் அன்பளிப்புகளை பெற்றுக் கொண்ட அவர், பின்னர் சாலை மார்க்கமாக ஈரோடு புறப்பட்டார்.

இந்நிகழ்வில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். ஈரோட்டில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, இன்று இரவு அவர் மீண்டும் கோவை வந்து விமானம் மூலம் சென்னை திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...