கோவை உக்கடத்தில் காவல்துறை சார்பில் இன்னிசை நிகழ்ச்சி - ஆர்வமுடன் கண்டு களித்த பொதுமக்கள்!

உக்கடம் அடுத்த பெரியகுளத்தில் உள்ள ஐ லவ் கோவை செல்பி ஸ்பாட்டில் கோவை மாநகர காவல்துறையின் சார்பில் நடைபெற்ற காவலர்களால் நடத்தப்பட்ட இன்னிசை நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் கண்டு களித்தனர்.


கோவை: உக்கடம் அடுத்த பெரியகுளத்தில் உள்ள ஐ லவ் கோவை செல்பி ஸ்பாட்டில் கோவை மாநகர காவல் துறையின் சார்பில் இன்னிசை நிகழ்வு நடைபெற்றது.



காவல்துறையும் பொதுமக்களும் இணைந்திருக்கும் நோக்குடன் கோவை மாநகர காவல் துறையின் சார்பில் காவல் இன்னிசை குழு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



இந்த இன்னிசை குழுவின் தேனிசை நிகழ்ச்சி கோவை உக்கடம் பெரியகுளம் ஐ லவ் கோவை என்ற இடத்தில் இன்று மாலை நடைபெற்றது.



இந்த இன்னிசை குழுவின் இசை நிகழ்ச்சியை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பார்வையிட்டார்.



இந்த நிகழ்வில் காவல்துறையின் சார்பில் பேண்ட் வாத்தியங்கள் வாசிக்கப்பட்டது.



இந்த இன்னிசை நிகழ்ச்சியில் இளமை இதோ இதோ, ஒரு தலை காதல தந்த, வச்சிக்கவா உன்ன மட்டும் போன்ற பாடல்கள் பாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஆறு காவலர்கள் பாடல் பாடியதுடன் 12 காவலர்கள் இசைக்கருவிகளை இசைத்தனர்.



இந்த நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...