தாராபுரம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டிய அமைச்சர்!

தாராபுரம் அடுத்த சின்னியகவுண்டம்பாளையம் பகுதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.13.90 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அடிக்கல் நாட்டினார்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த சின்னியகவுண்டன்பாளையம் கிராமத்தில் மேல்நிலை தொட்டி அமைக்க அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அடிக்கல் நாட்டினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்றத் தொகுதி தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் தொப்பம்பட்டி ஊராட்சி சின்னிய கவுண்டன் பாளையம் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.



தாராபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.13.90 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

இந்த பூமி பூஜையில் தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும் ஒன்றிய செயலாளருமான செந்தில்குமார், தாராபுரம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு, தாராபுரம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சசிகுமார், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...