எல்லாவற்றையும் பயன்படுத்தி கொண்டு வைகோவையே குறைசொல்வதா? - துரைசாமிக்கு மாவட்ட செயலாளர் நாகராஜ் கேள்வி!

திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக மாவட்ட செயலாளர் நாகராஜ், வைகோ மூலம் எல்லாவற்றையும் பயன்படுத்தி கொண்டு தற்போது வைகோவையே, அவைத்தலைவர் துரைசாமி குறை சொல்கிறார் என்றும், திமுகவுடன் கூட்டணி வைக்க கூடாது என்று போர் கொடி தூக்கியவர் தான் துரைசாமி எனவும் குற்றம்சாட்டினார்.


திருப்பூர்: வைகோ மூலம் எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொண்ட அவை தலைவர் துரைசாமி தற்போது வைகோவையே குறைசொல்வதா என திருப்பூர் மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.



திருப்பூர் காந்திநகர் பகுதியில் உள்ள மதிமுக மாநகர மாவட்ட அலுவலகத்தில் மாநகர மாவட்ட செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான நாகராஜ் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மதிமுக மாநகர மாவட்ட செயலாளர் நாகராஜ் கூறியதாவது, வைகோ மூலம் எல்லாவற்றையும் பயன்படுத்தி கொண்டு தற்போது வைகோவையே, அவைத்தலைவர் துரைசாமி குறை சொல்கிறார்.

தற்போது திமுகவுடன் மதிமுக இணைய வேண்டும் என்று சொல்பவர். கடந்த காலத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்த போது திமுகவுடன் கூட்டணி வைக்க கூடாது என்று போர் கொடி தூக்கியவர் தான் துரைசாமி. 3 பொதுக்குழுவுக்கு வராத துரைசாமி இன்று வரை அவை தலைவராக இருந்து வருகிறார்.

வைகோ மனிதநேயத்துடன் இருப்பதால் தான் இதுவரை அவைதலைவர் துரைசாமி மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதிமுகவில் உள்ளவர்கள் போலி உறுப்பினர் என்று சொல்வது மதிமுக தொண்டர் ஒவ்வொருவரையும் அவமானப்படுத்தும் விதமாக உள்ளது.

இனிவரும் காலங்களில் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கும் முடிவுக்கு கட்சித் தொண்டர்கள் அனைவரும் ஆதரவு தெரிவிப்பார்கள். துரை வைகோ கட்சிக்குள் வருவதற்கு முன் மதிமுக 28 அமைப்பாக இருந்ததாகவும்.

அவர் கட்சிக்கு வந்த பின்பு தற்போது 48 அமைப்புகளாக இருந்து வருவதாக தெரிவித்தார். வாரிசு அரசியல் வேண்டாம் என்று வைகோ எப்போதும் சொன்னதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே மதிமுக சொத்துக்களை அபகரித்த அவைத்தலைவர் துரைசாமி ஒழிக என்று, அவருக்கு எதிரான கோஷங்களை கட்சி நிர்வாகிகள் எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...