தமிழகத்தில் கொள்ளையடிப்பது மட்டுமே திமுகவின் பணி..! - முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு

திமுக ஆட்சி அகற்ற வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். சம்பாதித்த பணம் 30 ஆயிரம் கோடியை எங்கு வைப்பது என நிதி அமைச்சரே ஆடியோ வெளியீட்டு வாக்கு மூலம் அளித்துள்ளார். கொள்ளையடிப்பது மட்டும்தான் இந்த ஆட்சியின் பணியாக உள்ளது. ஆடியோ விவகாரத்தில் உண்மை தன்மை அறிய சிபிஐ விசாரணை தேவை என அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


கோவை: தமிழகத்தில் கொள்ளையடிப்பது மட்டும்தான் திமுக ஆட்சியில் முக்கிய பணியாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி குற்றச்சாட்டியுள்ளார்.

கோவை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டியில் நடைபெற்றது.



பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு படிவங்களை வழங்கினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தவில்லை. 12 மணி நேரம் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும் என சட்டத்தை கொண்டு வந்தார்கள். எதிர்க்கட்சித் தலைவர் எதிர்ப்புக்குப் பிறகு அந்த சட்டம் வாபஸ் பெறப்பட்டது. திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதி போன்ற உத்தரவுகள் வெளியிடப்பட்டது.

மின்கட்டணம், சொத்துவரி உயர்வு போன்ற பிரச்சினைகளால் மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று மக்கள் தெளிவாக உள்ளனர். சம்பாதித்த பணம் 30 ஆயிரம் கோடியை எங்கு வைப்பது என நிதி அமைச்சரே ஆடியோ வெளியீட்டு வாக்கு மூலம் அளித்துள்ளார்.

கொள்ளையடிப்பது மட்டும்தான் இந்த ஆட்சியின் பணியாக உள்ளது. ஆடியோ விவகாரத்தில் உண்மை தன்மை அறிய சிபிஐ விசாரணை தேவை என அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு மத்திய அரசு உத்தரவிடுவார்கள் என்று எதிர்பார்த்துள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...