கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொடர் நகைக் கொள்ளை - குற்றவாளியை கைது செய்தது தனிப்படை!

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய மாரிமுத்து என்ற நபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து தங்க நகைகளும் மீட்கப்பட்டன. வேறு ஏதாவது திருட்டு வழக்குகளில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை சூலூரைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கடந்த 23.02.2023 அன்று, 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அங்கீகரிக்கப்பட்ட லைன் இன்ஸ்பெக்டர் எனக் கூறி, சோலார் பழுதுபார்ப்பதற்காக வந்தார். அப்போது, வீட்டில் இருந்த 9 சவரன் நகைகளை அந்த நபர் கொள்ளையடித்துச் சென்றதாக தெரிவித்திருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளியைத் தேடிவந்தனர். அதன்பேரில், மாரிமுத்து என்றழைக்கப்படும் முத்துக்குமார் (வயது33) என்ற நபரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், அவர் சூலூர், அன்னூர், கோவில்பாளையம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 7 வீடுகளில் 30 சவரன் தங்கத்தை கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து தங்க நகைகளையும் மீட்டனர்.

இது தொடர்பாக பேசிய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததோடு, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...