திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் - தாராபுரம் அருகே போலீசாரால் கைது!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே திருட்டு வழக்கில் மதன், லோகேஸ்வரன் என இருவரை கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த சுமதி என்கிற பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து மூன்றே கால் பவுன் தங்க நகையும் பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: தாராபுரத்தை அடுத்த காங்கயம் பாளையம் தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்கிற அலையாசி மதன் (வயது 35).

இவருடைய மனைவி சுமதி (வயது31). அதே பகுதியில் வசிக்கும் நண்பர் லோகேஸ்வரன் (வயது35).

இவர்கள் 3 பேரும் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள வழக்கறிஞர் வீட்டிலும், நஞ்சம்பாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலில் சாமி கழுத்தில் இருந்த மாங்கல்யத்தையும் திருடிச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதையடுத்து, இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக தாராபுரத்தை அடுத்த காங்கயம் பாளையம் தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்கிற அலையாசி மதன் (வயது 35) மற்றும் இவருடைய நண்பர் லோகேஸ்வரன் (வயது35) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய செல்வகுமார் மனைவி சுமதியை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், சுமதியை கண்டுபிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து சப்-இன்ஸ்பெகடர் கருப்பு சாமி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சுமதி கழுத்தில் நகை அணிந்து இருந்தார். அது திருட்டு நகைதான் என தெரியவந்தது.

இதையடுத்து, சுமதியை கைது செய்து, அவர் அணிந்திருந்த 3¼ பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். கைதான சுமதி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...