உடுமலை பாஜக சார்பில் மன் கி பாத் நிகழ்ச்சி - 250பேர் பங்கேற்பு

உடுமலை நகர பாஜக சார்பில் பிரதமர் மோடி வானொலியில் பேசும்  100ஆவது மன் கி பாத்  நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


திருப்பூர்: உடுமலை நகர பாஜக சார்பில் மன் கி பாத் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் அமைந்துள்ள தேஜஸ் திருமண மஹாலில் உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்களின் 100 வது மன் கி பாத் நிகழ்ச்சி நகர மண்டலத் தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில்இந்தியாவில் சிறு தொழில் நிறுவனங்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் பல்வேறு தரப்பிலான நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது மன் கி பாத் திட்டத்தின் மூலம்தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசின் பங்கு குறித்து பெரிய திரையில் பிரதமர் மோடியின் உரையை தமிழாக்கத்துடன் கேட்டனர்.



இதில் மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன்,மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி, நகர பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், தம்பித்துரை , முன்னாள் நகர தலைவர் பி.என்.ராஜேந்திரன் , மாவட்ட மருத்துவர் அணி தலைவர் விஜய் கண்ணா உட்பட 250-க்கும் மேற்பட்டடோர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...