கோவை தனிப்படை போலீசாருக்கு பயந்து ரவுடி வெளியிட்ட வீடியோ வைரல்

பெங்களூருவில் நண்பனின் கொலைக்கு பழிவாங்க திட்டமிட்ட ரவுடிகளை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்த நிலையில், ரவுடி அமர்நாத் போலீசாருக்கு பயந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.


கோவை: தனிப்படை போலீசாருக்கு பயந்து தப்பி ஓடிய ரவுடி மரண பயத்தில் வெளியிட்ட வீடியோ வெளியிட்டுள்ளது வைரலாகியுள்ளது.

கோவையில் சில வாரங்களுக்கு முன்பு இரண்டு பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதில் கோகுல் என்ற ரவுடி நீதிமன்றம் பின்புறம் பொதுமக்கள் அதிகம் நடமாடுகின்ற சாலையிலேயே பட்டப்பகலில் ரவுடி கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். இந்நிலையில் பந்தய சாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துடிதப்படுத்தினர்.

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், துணை ஆணையாளர் சந்திப் மேற்பார்வையின் கீழ் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்தனர். வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட போது இந்த கொலை சம்பவம் இரு பிரிவு இடையே நடைபெறும் பழிவாங்கும் நடவடிக்கை என்பது தெரிய வந்தது.

இந்நிலையில் கோகுலை வெட்டி கொன்றவர்களை பழிவாங்கும் நோக்கத்தில் கோகுலின் நண்பர்கள் தரப்பு திட்டமிட்டிருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இந்நிலையில் அவர்களை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் திட்டமிட்டனர். அதனடிப்படையில் பதுங்கி இருந்த கோகுல் நண்பர்கள் தரப்பு பெங்களூரில் இருப்பதை போலீசார் தெரிந்து கொண்டனர் . பின்னர் அவர்கள் அங்கு விரைந்து சென்று கோகுலின் நண்பர்கள் தரப்பை கைது செய்ய முனைப்பு காட்டினர்.



அப்போது அவர்கள் பெங்களூர் புறநகரில் உள்ள ஒரு குடியிருப்பில் தங்கி இருப்பது தெரிய வந்தன. சுஜி மோகன், பிரவீன் ராஜ், அமர்நாத், பிரசாந்த் நான்கு பேரும் ஒரு குடியிருப்பிலும், அஸ்வின், ராஜேஷ்,பிரதீப் மற்றொரு குடியிருப்பிலும் தங்கி இருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்ததை அறிந்த ரவுடிகள் தப்பிக்க முயன்றனர். இதில் சிலர் நேரடியாக போலீசாரிடம் பிடிபட்ட நிலையில் சிலர் விரட்டி பிடிக்கப்பட்டனர்.



சுஜி மோகன், பிரவீன் ராஜ் தப்பி ஓட முயன்ற நிலையில் போலீசாரிடம் பிடிபட்டனர். இந்த நிலையில் அமர்நாத் மற்றும் பிரசாந்த் இரண்டு நபர்களும் நான்கு கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று தப்பி ஒட முயன்ற ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அஸ்வின், ராஜேஷ், பிரதீப் உள்ளிட்ட மூவரும் வேறு ஒரு குடியிருப்பிலிருந்த பொழுது கைது செய்யப்பட்டனர்.

போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடி அமர்நாத் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் எங்களை புடிக்க போறாங்க.... எங்களை சுத்திட்டாங்க...... நாங்க ஓடிட்டோம்..... என் கை கால்கள் நன்றாக இருக்கு... போலீஸ் எங்கள புடிக்க போறாங்க... என்ன பன்னுவாங்க ஏது பன்னுவாங்கன்னு தெரியல... இந்த வீடியோவ எல்லாருக்கும் அனுப்பி எல்லாத்தையும் காப்பாத்தனும்.. என்று அந்த வீடியோவை பதிவிட்டு இருக்கின்றார்.

தனிப்படை போலீசாருக்கு பயந்து தப்பி ஓடிய ரவுடி மரண பயத்தில் வெளியிட்ட வீடியோ தற்பொழுது வெளியாகி இருக்கின்றன. கோவையில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடந்த நிலையில், ரவுடிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்ற நிலையில் இதுவரை என்பதற்கும் மேற்பட்டோர் கைதாகி இருக்கின்றனர். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அதிரடி நடவடிக்கை தொடரும் என போலீசார் தெரிவித்திருக்கின்றன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...