தாராபுரம் அருகே விபத்தில் காயமடைந்தவருக்கு முதல் உதவி செய்த திமுக மாவட்டச் செயலாளர்

தாராபுரம் அருகே உள்ள மூலனூர் முதல் வெள்ளக்கோவில் செல்லும் சாலையில் புதுப்பை உள்ளது. இந்த இடத்தில் லாரியும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், காயமடைந்த முதியவருக்கு திமுக தெற்கு  மாவட்டச் செயலாளர் பத்மநாபன் முதலுதவி செய்தார்.


திருப்பூர்: புதுப்பை அருகே சாலையில் அடிபட்ட நபருக்கு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் முதல் உதவி செய்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் முதல் வெள்ளக்கோவில் செல்லும் சாலையில் புதுப்பை உள்ளது. இந்த இடத்தில் அமராவதி ஆற்று பாலத்தின் அருகே லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.



இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவர் படுகாயம் அடைந்தார். அப்போது அந்த வழியாக சென்ற திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி நான்காவது மண்டல தலைவருமான பத்மநாபன் சாலை விபத்தில் அடிபட்ட முதியவரை காப்பாற்றி ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து முதலுதவி சிகிச்சைக்காக வெள்ளக்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...