விவசாய உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை..! - எம்எல்ஏ ஈஸ்வரன் குற்றச்சாட்டு

50 ஆண்டு காலமாக விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலையை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.



கோவை: விவசாயிகளின் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க அரசு வழி வகை செய்யவில்லை என கொமதேக பொதுச்செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் விவசாய அணி சார்பில் அடுத்த தலைமுறையை தாண்டி விவசாயம் காப்போம் என்ற தலைப்பில் விவசாய கருத்தரங்கு நடைபெற்றது.



இதில் கோவை, திருப்பூர்,ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.



விவசாயத்தை அழிவிலிருந்து காத்திடவும், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றி அடுத்த தலைமுறையினரை விவசாயத்தில் ஈடுபட வைப்பது உள்ளிட்டதலைப்புகளில் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

இதில் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

50 ஆண்டு காலமாக விவசாய திட்டங்களுக்கு அரசு பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கினாலும் அது உற்பத்தியை பெருக்க மட்டும் தான் இருக்கிறது.

உற்பத்தியாகும் பொருளை எப்படி, எங்கே விற்பனை செய்யலாம் எப்படி நல்ல விலை பெறலாம் என்ற திட்டங்கள் இல்லை. அரசு விவசாய பொருட்களை உற்பத்தி செய்வதற்கு உதவி செய்வதை உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்வதற்கு உதவி செய்ய வேண்டும்.

உள்நாட்டில் வியாபாரம் செய்வது, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்வது என்ற விழிப்புணர்வை விவசாயிகள் மத்தியில் அரசு ஏற்படுத்த வேண்டும் விதைப்பது, உற்பத்தி செய்வது போன்ற அத்தனை திட்டங்களிலும் அரசு நிதி ஒதுக்கி உதவுகிறது ஆனால் அறுவடை முடிந்தவுடன் அரசு தப்பித்துக் கொள்கிறது அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.

உற்பத்தி செய்யப் பொருளை விற்க முடியாமல் விவசாயிகள் கஷ்டப்படுகின்றன உற்பத்திக்கேற்ற விலை கிடைப்பதில்லை இதனால் விவசாயிகளை வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதோடு விவசாய நிலங்களை விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் இந்த வேறுபாடுகளை அரசு கலைய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...