பொள்ளாச்சியில் ஓவியப் போட்டி -மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

பொள்ளாச்சியில் கோவை அகாடமி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் பள்ளி, மாணவ மாணவிகளின் தனி திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.



கோவை: பொள்ளாச்சியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது.

கிராமப்புறங்கள் மற்றும்நகர்ப்புறங்களில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் செல்போனில் மூழ்கி கிடக்கும் குழந்தைகளுக்கு மாற்றம் வர வேண்டும் என்ற நோக்கிலும், இயற்கை விவசாயம், நீர் வளம் காப்பது, குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை அகாடமி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்ஓவியப்போட்டி நடைபெற்றது.



இதில் பொள்ளாச்சி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து LKG முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் என 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பூக்கள்-பழங்கள் பூக்கூடை, பூ ஜாடி, பழக்கூடை, நீர் வளம் காப்போம், இயற்கையை போற்றுவோம், எனது கிராமம் என்ற நான்குதலைப்புகளில் நான்கு பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது.



தங்களுக்கு வழங்கப்பட்ட தலைப்புகளில் மாணவ மாணவிகள் ஓவியங்களை வரைந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர் இதில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு கோப்பைகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...