கோவை அருகே இறந்த நிலையில் பெண் யானை மீட்பு - இறப்பிற்கான காரணத்தை அறிய இன்று உடற்கூறாய்வு!

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பாலமலை அடிவாரத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அடர்ந்த வனப் பகுதியில், பெண் யானை இறந்து நிலையில் மீட்கப்பட்டது. அந்த யானையின் உடலை கால்நடை மருத்துவர்கள் இன்று உடற்கூறாய்வு செய்கின்றனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், பெரியநாயக்கன்பாளையம் பிரிவு, மாங்குழி சுற்று, பெருக்குபதி சராகம், தடாகம் காப்புக்காட்டிற்குள்,

பாலமலை அடிவாரத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அடர்ந்த வனப் பகுதியில், பெரியநாயக்கன்பாளையம் பிரிவு வனவர் தலைமையிலான களப்பணியாளர்களின் வழக்கமான ரோந்து பணியின்போது வயது வந்த ஒரு பெண் யானை இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், இறந்து கிடந்த யானையை பரிசோதித்தனர்.

அதில் யானையின் உடலில் காயங்களோ, வேறு அசாதாரண தடயங்களோ ஏதுமில்லை என தெரியவந்துள்ளது.

யானை இறப்பிற்கான காரணத்தை கண்டறிய கால்நடை மருத்துவர்கள் இன்று காலை உடற்கூறு ஆய்வு செய்யவுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...