தாராபுரம் அருகே கோயிலில் தேனீக்கள் தாக்குதல் - 4 வயது சிறுமி உட்பட 15 பேர் பாதிப்பு!

தாராபுரம் அருகே கோவிலுக்கு சென்ற பொதுமக்களை தேனீக்கள் கொட்டியதில் 4 வயது சிறுமி உட்பட 15 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட அனைவரும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தேர்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த காட்டம்மன் திருக்கோவில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சாமி கும்பிடச்செல்வது வழக்கம். அந்தவகையில், தேர் பட்டி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் காட்டம்மன் கோவிலுக்கு நேற்றுச் சென்றனர்.



பக்தர்கள் பொங்கல் வைத்து கொண்டிருக்கும்போது, எழுந்த புகை காரணமாக அங்கிருந்த தேனீக்கள் பக்தர்களை கொட்டத் தொடங்கியது. இதில் தேர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி மகா (4),சுந்தரபாண்டி (11), பிரியங்கா (21), சுகன்யா (28), பிரியா (32), கவிதா (33), சக்திவேல் (40), கன்னியாத்தாள் (58),வள்ளியம்மாள் (75) உட்பட 15 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து, அவர்கள் அனைவரும் உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர். இரண்டு பேர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பக்தர்களை தேனீக்கள் கொட்டிய சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...