தாராபுரத்தில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள்!

தாராபுரத்தில் அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் திமுகவில் இணைந்துக் கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் திமுக நகர கழக அலுவலகத்தில் அதிமுக, பாஜக, தேமுதிகவை சேர்ந்த மாற்று கட்சியினர் ஏராளமானோர் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவருமான பத்மநாபன் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.



இந்த நிகழ்ச்சியில், தாராபுரம் திமுக நகர கழக செயலாளர் முருகானந்தம் நகர மன்ற தலைவர் பாபு கண்ணன், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் பிரபாவதி பெரியசாமி, நகர துணை செயலாளர் கமலக்கண்ணன்,



மூலனூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட பிரதிநிதிகள் ஸ்ரீனிவாசன், பைக் செந்தில்குமார், ஐயப்பன் யூசஸ், இளைஞர் அணி கவிராஜ் 10வது வார்டு திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக கவுன்சிலர்கள் வார்டு பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...