மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் - தாராபுரத்தில் ரேக்ளா மாட்டு வண்டிப் பந்தயம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, ஒன்றிய திமுக மற்றும் சின்னமலை குரூப்ஸ் இணைந்து ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தை நடத்தியது. இதனை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த சோமனூரில் இருந்து மண்டலபுதூர் செல்லும் சாலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தாராபுரம் ஒன்றிய திமுக சின்னக்கம்பாளையம் பேரூர் கழக திமுக மற்றும் சலாம் பாளையம் சின்னமலை குரூப்ஸ் இணைந்து நடத்திய 14 ஆம் ஆண்டு ரேக்ளா மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், போட்டியை கொடியசைத்து தொடங்கி துவக்கி வைத்தார். தாராபுரம் ஒன்றிய கழகச் செயலாளர் ஊராட்சி ஒன்றிய தலைவருமான எஸ் வி செந்தில் குமார், கோவை தெற்கு மாவட்ட திமுக பொருளாளரும், ரேக்ளா சங்கத்தின் தலைவருமான பிரகாஷ் சின்னக்கம்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.



200 மீட்டர் 300 மீட்டர் என 2 பிரிவுகளாக நடத்தப்பட்ட ரேக்ளா பந்தயத்தில், பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை பழனி தாராபுரம் குடிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன.



நிர்ணயிக்கப்பட்ட தூரங்களை குறிப்பிட்ட குறைவான மணித்துளிகளில் சென்றடையும் முதல் மூன்று காளை மாடுகளுக்கு தங்க காசுகள் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்று சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை, சாலையில் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளுக்கு பின்னால் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உற்சாக குரல் எழுப்பி கண்டு ரசித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...