கோவையில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப்பை திருடிவிட்டு சிக்கிய பெண் - வைரலாகும் வீடியோ

கோவை காந்திபுரத்தில் எலக்ட்ரானிக்ஸ் கடையில் முகக்கவசம் அணிந்தபடி வந்த ஜோடி, நூதன முறையில் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விற்பனையாளர் உரிய நேரத்தில் கவனித்ததால் 60 ஆயிரம் மதிப்பிலான லேப்டாப் தப்பியது.



கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் கடையில் கடையில் விஷ்ணு என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன் தினம் மாலை கடைக்கு வந்த மாஸ்க் அணிந்து வந்த இளைஞர் மற்றும் ஒரு பெண் கம்பியூட்டர் மவுஸ் பார்த்துக் கொண்டிருந்தனர்.



அந்த நேரத்தில், அவர்கூட வந்த அந்தப் பெண்மணி டிஸ்ப்ளே-வில் வைக்கப்பட்டுள்ள லேப்டாப் எடுத்து தனது பேக்கில் வைத்துள்ளார்.



இதனைப் பார்த்த விற்பனையாளர், அந்த லேப்டாப்பை கொடுத்து விடுங்கள் என பெண்ணிடம் கூறினார். இதையடுத்து, பையில் இருந்த லேப்டாப்பை அந்தப் பெண் திரும்பக் கொடுத்தார். பின்னர் இருவரும் எந்த பொருளையும் வாங்காமல் அந்த கடையை விட்டு சென்று விட்டனர்.



சரியான நேரத்தில் விற்பனையாளர் விஷ்ணு கவனித்தால் 60 ஆயிரம் மதிப்பிலான லேப்டாப் தப்பியது. இந்த நூதன கொள்ளை முயற்சியின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...