கோவை கவுண்டம்பாளையத்தில் கனமழை - மேம்பாலத்தின் அடியில் சிக்கிய கார்!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் மழைநீர் தேங்கி நின்றதால் அவ்வழியாக வந்த கார் ஒன்று அடியில் சிக்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, திருப்பி விடப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை மாநகரில் இன்று உக்கடம், கவுண்டம்பாளையம், காந்திபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் அப்பகுதியில் செல்லும் மக்கள் உள்ளிட்டோர் பாதிப்படைந்தனர்.



இந்நிலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் மழை நீர் தேங்கி நின்றதால் அவ்வழியாக வந்த கார் ஒன்று அடியில் சிக்கியது.



இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.

தற்போது அந்த வாகனத்தை வெளியில் எடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...