கோவை அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.7.50 லட்சம் கொள்ளை - போலீசார் விசாரணை!

கோவை ஆலாந்துறையை சேர்ந்த சண்முகசுந்தரம், பூளுவம்பட்டி டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வருகிறார். பணியை முடித்து விட்டு வந்த போது, கத்தியை காட்டி ரூ.7.50 லட்சம் பணம் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: பூளுவம்பட்டி டாஸ்மாக் கடை ஊழியரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை ஆலாந்துறையை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் பூளுவம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றி வருகிறார். இன்று விடுமுறை என்பதால் நேற்று டாஸ்மாக் கடையில் வசூலான பணம் ரூ.7.38 லட்சம் மற்றும் பதிவேட்டை எடுத்துக் கொண்டு, தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது ஆலாந்துறை அருகே வந்தபோது, அவரை வழி மறித்த 3 இளைஞர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7.38 லட்சம் பணம், செல்போனை கொள்ளைடித்து சென்றனர். இதையடுத்து அவர் ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார்.

புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் டாஸ்மாக் ஊழியரிடம் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடிவருகின்றனர். மேலும் ஊழியருக்கும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர் இருக்குமோ? என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...