மதிமுகவை திமுகவுடன் இணைந்து விடுவது நல்லது..! - அவைத்தலைவர் துரைசாமி யோசனை

திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக அவைத்தலைவர் துரைசாமி, மதிமுக பெருங்காய டப்பா போல காலியாகி விட்டது. எதிர்காலம் என்ற ஒன்று மதிமுகவிற்கு இல்லை, இளைஞர்கள் நலன் கருதி மதிமுகவை இப்போதே திமுகவில் இணைந்து விடுவது நல்லது என்று தெரிவித்துள்ளார்.



திருப்பூர்: மதிமுகவிற்கு எதிர்காலம் என்ற ஒன்று இல்லை என மதிமுக அவைத்தலைவர் துரைசாமி விமர்சித்துள்ளார்.

மதிமுக அவைத்தலைவர் துரைசாமி வைகோவிற்கு ஐந்து முறை கடிதம் எழுதியும் எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை எனவும் மதிமுகவை திமுகவில் இணைத்து விடுங்கள் என கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று திருப்பூர் மதிமுக தொழிற்சங்க அலுவலகத்தில் மதிமுக அவைத்தலைவர் துரைசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது,



மதிமுகவை உடைக்க யார் தூண்டுதலும் கிடையாது. மற்றவர்கள் சொல்லி எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கட்சி எங்கு இருக்கிறது அதனை உடைக்க.

மதிமுக பெருங்காய டப்பா போல காலியாக உள்ளது. மதிமுகவிற்கு எதிர்காலம் என்ற ஒன்று கிடையாது. கட்சியில் உள்ள இளைஞர்கள் நலன் கருதி இப்போதே திமுகவில் சேர்த்து விடுவது நல்லது. யார் சொல்வதை பற்றியும் எனக்கு கவலை இல்லை. தொழிற்சங்க சொத்துக்கு சண்டை என கூறுகின்றனர்.

தமிழகத்தில் திமுக சார்பில் முதல் தொழிற்சங்கத்தை துவங்கியது நான் தான். தொழிற்சங்கத்தை விதிமுறைகள் (பை லா) தான் கட்டுப்படுத்தும். அரசியல் கட்சிகள் இல்லை. சங்கத்தின் பொறுப்பாளர் பெயரில் சொத்துக்கள் இருக்குமே தவிர தனி நபர் பெயரில் இல்லை. ஒருவர் கையெழுத்து போட்டு எதையும் தூக்கி செல்ல முடியாது. விவரம் தெரியாமல் பேசி வருகின்றனர்.

தாயகம் கட்டிடம் மட்டும் வை.கோபாலசாமி என தனிப்பெயரில் வாங்கி உள்ளார். ஆனால் நாங்கள் பொதுச் செயலாளர், பொருளாளர் பெயரில் மட்டுமே வாங்கி உள்ளேன். கட்சி துவங்கிய நோக்கம் இன்று இல்லை. மதிமுக பலவீனமடைந்து உள்ளது. கிளை கழகம் அமைக்க 100 பேர் உறுப்பினர்களாக தேவை‌. ஆனால் பொய்யான பெயர்களை பதிவு செய்து ஏமாற்றி வருகின்றனர்.

பெரியார், அண்ணா கொள்கைகளை வலியுறுத்தி போராடுவேன். திமுகவிற்கு ஆதரவு அளிப்பேன். கட்சியில் இணைய மாட்டேன். எனது கேள்விக்கு பதில் சொல்ல முடியாததால் என்னை பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என வைகோ சொல்கிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...