வால்பாறையில் மே தின பொதுக்கூட்டம் - அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்பு!

வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிற்சங்கம் சார்பில், பழைய பேருந்து நிலையம் அருகில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பேரணியில் அனைத்து தொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 450 ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.


கோவை: வால்பாறையில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டன.

கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிற்சங்கம் சார்பாக வால்பாறை பழைய பேருந்து நிலையம் அருகில் மே தின பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த பொதுக்கூட்டத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு எஸ்டேட் நிறுவனங்கள் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்புகளில் நடைபாதை, கழிப்பிட வசதி, குடிநீர், குடியிருப்பு ரிப்பேர், மற்றும் நவீன மருத்துவ வசதி உடைய மருத்துவமனை அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும். தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



வால்பாறையில் உள்ள தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய இந்த மே தின பொதுக்கூட்டத்தில், பழைய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட மக்கள் கையில் கொடியேந்தி பேரணியில் ஈடுபட்டனர். இந்த பேரணி பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து வரை சென்று மீண்டும் அஞ்சலகம் வரை சென்று வந்தனர்.



இந்த பேரணியில் CITU பொது செயலாளர் பரமசிவம், கண்ணில் கருப்பு துணி அணிந்து கலந்து கொண்டார். இதில் வால்பாறையில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 450 ரூபாய் வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இக்கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி மோகன், ஏ.என்.டி.யு.சி. கருப்பையா, சி.ஐ.டி.யு பரமசிவம், ஹச்.எம்.எஸ் மாணிக்கம், வி.டி.டி.எஸ் தர்மராஜ், ஐ.என்.பி.சி.டபிள்யூ அருணகிரி பாண்டி, ஏ.ஐ.டி.டி.யு எட்வர்ட், பி.டி.எம் செந்தில் முருகன், தே.ஆ.தோ சங்கம் ராஜேந்திரன், ஆகிய தொழிற்சங்க பொதுச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...