பல்லடத்தில் நேபாள இளைஞரைத் தாக்கிய ரவுடிகள் - புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூர் செந்தில் நகரில் வட மாநில தொழிலாளர் என நினைத்து குஷால் என்ற நேபால் இளைஞரை ரவுடிகள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலத்த காயத்துடன் நேபால் இளைஞர் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூர் செந்தில்நகரில் வசித்து வருபவர் குஷால். நேபாளத்தை சேர்ந்த இவர், தனது மனைவி ஜெசி, தனது மகன்கள் யாசர் அராபட் மற்றும் ரியாஸ் ஆகியோருடன் மேற்கு பல்லடத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாதப்பூர் அருகே உள்ள செந்தில் நகருக்கு குடியேறியுள்ளார். 15 ஆண்டுகளாக பல்லடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த குஷால், தற்போது வேலை தேடி வருகிறார்.



இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வீரமணி மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் குஷாலிடம் உனக்கு வேலை வாங்கி தருகிறோம் எனவும், வட மாநில இளைஞர்களை எங்களிடம் அழைத்து வா எனவும் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

நான் நேபாளத்தை சேர்ந்தவன் எனவும், வட மாநில தொழிலாளர்கள் எனக்கு யாரும் தெரியாது என குஷால் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அன்புமணி மற்றும் வீரமணி ஆகியோர் குஷாலின் வீட்டுக்குள் புகுந்து அவர் மீது சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், குஷாலின் இரு சக்கர வாகனத்தையும் அவர்கள் திருடிச் சென்றுள்ளனர்.



படுகாயம் அடைந்த குஷாலை மீட்டு அவரது மனைவி, பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், தனக்கும் தனது குடும்பத்தின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளதாகவும் படுகாயம் அடைந்த குஷால் தெரிவித்துள்ளார்.

மேலும் தாக்குதலில் ஈடுபட்ட அன்புமணி மற்றும் வீரமணி ஆகியோர் மீது ஏற்கனவே பல்லடம் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசுவதாக வைரலான வீடியோ குறித்த வழக்கும், வழிப்பறி மற்றும் அடிதடி வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...