கோவை மாநகராட்சி 15வது வார்டில் மே தின கொண்டாட்டம்!

கோவை ஜி.என்.மில்ஸ் அடுத்துள்ள சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மே தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


கோவை: கோவை 15வது வார்டில் காங்கிரஸ் சார்பில் மே தினம் கொண்டாடப்பட்டது.

கோவை ஜி.என்.மில்ஸ் அடுத்துள்ள சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் மே தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 15வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து தலைமை தாங்கினார்.

காங்கிரஸ் மாநில பொதுசெயலாளர் பச்சைமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சேக் அப்துல் காதர் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் அணி அமைப்பாளர் விஜயா மனோகர் மற்றும் மாவட்ட துணை செயலாளர் மனோகர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.



தொடர்ந்து நடைபெற்ற விழாவில் சைக்கிள் சரி செய்யும் தொழிலாளி மருதாசலம் கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து மே தினம் குறித்து பச்சைமுத்து சாந்தாமணி பச்சைமுத்து, மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் சின்னுராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.



அதன்பிறகு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செந்தில்குமார், சதீஷ்குமார், ஆர்.மணி, ரகுபதி, ரங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...