வால்பாறையில் எம்ஜிஆர் தோட்ட தொழிற்சங்க சார்பில் தொழிலாளர்களுக்கு நிதியுதவி

வால்பாறையில் மே தினத்தை ஒட்டி நடந்த தொழிற்சங்கங்களின் பொதுக்கூட்டத்தில் எம்ஜிஆர் தேயிலைத் தோட்ட தொழிற்சங்கம் சார்பில் 40 நலிந்த தொழிலாளர்களுக்கு சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.


கோவை: வால்பாறையில் மே தினத்தை முன்னிட்டு தொழிற்சங்கங்கள் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



கோவை மாவட்டம் வால்பாறையில் மே தினத்தை முன்னிட்டு தொழிற்சங்கங்கள் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடத்தின.



இதில் ஒரு பகுதியாக எம்ஜிஆர் தேயிலைத் தோட்ட தொழிற்சங்கம், வால்பாறை அமீது தலைமையில் 40 நலிந்த தொழிலாளர்களுக்கு சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

எம்ஜிஆர் தேயிலைத் தோட்ட தொழிற்சங்கம் 34 ஆம் ஆண்டு துவக்க விழாவில் தொழிலாளர்களுக்கு எம்ஜிஆர் தொழிற்சங்க அலுவலகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 62 எஸ்டேட் பகுதிகளில் இருந்து தோட்ட தொழிலாளர்கள் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



மே தினம் கொண்டாடும் வகையில் 40 தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

தற்போது அரசு அறிவித்த 450 ரூபாய் சம்பளம் வழங்காமல் தற்போது தொழிலாளர்களுக்கு 425 ரூபாய் நிர்வாகம் சம்பள வழங்கப்பட்டு வருகிறது.

தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்து இழுவை தொகையை திரும்ப வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும், அரசு அறிவித்த 450 ரூபாய் சம்பளம் வழங்க தமிழ்நாடு அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று வால்பாறை அமீது தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...