மே தினம் - உடுமலை சுற்றுவட்டார கிராமங்களில் கிராம சபை கூட்டம்

மே தினத்தை ஒட்டி திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சின்ன வீரன் பட்டி, ஆண்டிய கவுண்டனூர் , கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனூர், பெரியகோட்டை உள்ளிட்ட கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர்.


திருப்பூர்: மே தினத்தை ஒட்டி உடுமலை சுற்றுவட்டார கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மே தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் படி, சின்ன வீரன் பட்டி, ஆண்டிய கவுண்டனூர், கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனூர், பெரியகோட்டை ஊராட்சி உட்பட பல்வேறு கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



இக்கிராம சபை கூட்டத்தில் ஊராட்சிகளின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது, கிராம வளர்ச்சி திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புகள் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் அனைவருக்கும் வீடு கணக்கெடுக்கும் பணி உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.



குறிப்பாக ஜல் ஜீவன் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உறுதி மொழி எடுக்கும் நிகழ்வு கிராம சபை கூட்டங்களில் நடைபெற்றது. இதில், சின்ன வீரன் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி பழனிச்சாமி, கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காமாட்சி அய்யாவு, பெரிய கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் பாலசுப்பிரமணியம், கண்ணமநாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் கருப்ம்மாள், ஆண்டிய கவுண்டனூரா ஊராட்சி மன்ற தலைவர் மோகனவள்ளி ராஜசேகரன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...