மே தினம் விடுமுறை - உடுமலை பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

மே தினம் விடுமுறையை ஒட்டி உடுமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டதால், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது.

உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல் குருமலை, கீழ்குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு, பாரப்பட்டியாறு, குருமலைஆறு, கிழவிப்பட்டிஆறு, உப்புமண்ணபட்டி ஆறு, பாலாறு, உழுவியாறு உள்ளிட்டவை நீராதாரமாக உள்ளது.

இந்த அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழைக்கு பின்பு அருவியின் நீராதாரங்களில் மழை பெய்யவில்லை. ஆனாலும் ஓரளவுக்கு நீர்வரத்து இருந்து வந்தது.

இதையடுத்து சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவிக்கு உற்சாகத்தோடு வந்து குளித்து மகிழ்ந்தனர். இந்த சூழலில் வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக அருவியின் நீராதாரங்களில் நீர்வரத்து குறைந்ததால் பஞ்சலிங்க அருவியிலும் நீர்வரத்து குறைந்தது.

இந்த நிலையில் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த வாரம் திடீரென மழை பெய்தது. இதன் காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதைத் தொடர்ந்து கோடை விடுமுறைக்காக சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்தோடு குடும்பம் குடும்பமாக அருவியில் குளித்து வந்தனர். இதனால் நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கணிசமான அளவில் இருந்தது. இந்த சூழலில் நேற்று முன்தினம் அருவியின் நீராதாரங்களில் திடீரென சாரல் மழை பெய்தது.

அதைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் பஞ்சலிங்க அருவியில் மே தினத்தை ஒட்டி சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...