உடுமலை அருகே மர்ம விலங்கு கடித்ததில் 6 ஆடுகள் பலி - அச்சத்தில் மக்கள்!

உடுமலை அடுத்த படையாட்சி புதூரில் தங்கராசு என்பவரது தோட்டத்திற்கு அருகே கட்டப்பட்டிருந்த ஆடுகளை மர்ம விலங்கு தாக்கியதில் 6 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், வனத்துறை குழு அமைத்து கண்காணித்து மர்ம விலங்கை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே 6 ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கை வனத்துறை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மைவாடி அடுத்த படையாட்சி புதூர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி மகன் தங்கராசு. இவரது தோட்டத்துக்கு அருகேயுள்ள சாலை பகுதியில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை நள்ளிரவில் வந்த மர்ம விலங்கு கடித்து குதிறியதாக கூறப்படுகிறது. இதில், ஆறு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

மேலும் இரண்டு ஆடுகள் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே மர்ம விலங்கு நடமாட்டம் அதிகமாக உள்ளதாகவும், வனத்துறையினர் இப்பகுதியில் குழு அமைத்து இரவு நேரங்களில் கண்காணித்து ஆடுகளை கொன்று வரும் மர்ம விலங்கை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...