கோவை வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா கொண்டாட்டம்!

துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே கோவை புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இதில், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார், முன்னாள் எம்.எல்.ஏ, ஓ.கே சின்னராஜ் ஆகியோர் கலந்துகொண்டு தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்தனர்.


கோவை: துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.



கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் மற்றும் கோவை புறநகர் வடக்கு மாவட்ட தொழிற்சங்க செயலாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ, ஓ.கே சின்னராஜ் ஆகியோர் கலந்துகொண்டு தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து மே தினம் குறித்து பேசினர்.



தொடர்ந்து துடியலூர் பகுதி கழக செயலாளர் வனிதாமணி அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.



அதேபோல துடியலூர் - அப்பநாயக்கன்பாளையம் செல்லும் சாலையில் தொழிற்சங்க பேரவை கொடி ஏற்றப்பட்டது. இந்த விழாவிற்கு துடியலூர் பகுதி கழக அண்ணா தொழிற்சங்க செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். தொழிற்சங்க கிளை தலைவர் கண்ணதாசன் முன்னிலை வகித்தார்.



இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், அம்மாபேரவை செயலாளர் கவிச்சந்திரன் மோகன், அவைத்தலைவர் ஐ.டி.ஐ.ஜெயராஜ், 1வது வட்ட கழக அவை தலைவர் செல்வகுமார், 2, 2ஏ, 14, 15ஏ வார்டு செயலாளர்கள் ஜெயகுமார், காளிச்சாமி, பந்தல் வீடு பிரகாஷ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...