மே தினத்தன்று உடுமலையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை - வைரல் வீடியோ

உடுமலை கல்பனா திரையரங்கம் பின்புறம் உள்ள அரசு மதுபான கடை பகுதியில் மே தினத்தன்று கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


திருப்பூர்: உடுமலையில் மே தினத்தன்று கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படும் வீடியோ வைரலாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று மே தினத்தை ஒட்டி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி அரசு மதுபான கடைகள் மூடப்படும் என அறிவித்த நிலையில் உடுமலையில் பெரும்பாலான இடங்களில் மது விற்பனை கள்ளச் சந்தையில் அமோகமாக நடைபெற்று வருகின்றது.

குறிப்பாக கல்பனா தியேட்டர் பின்புறம் உள்ள அரசு மதுபான கடை, அர்பன் பேங்க், தாராபுரம் ரோடு அரசு மதுபான கடை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கள்ளச் சந்தையில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றது. சமூக ஆர்வலர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தாலும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபடவில்லை எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்ட எஸ்.பி-க்கு வீடியோ எடுத்து அனுப்பி உள்ளனர்.



இதற்கிடையில் கல்பனா திரையரங்கம் பின்புறம் உள்ள அரசு மதுபான கடை பகுதியில் மே தினத்தன்று கள்ளத்தனமாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...