தாராபுரத்தில் காரை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுவன் - 11 வயது சிறுமி பலியான சோகம்!

தாராபுரம் பிரதான சாலையில் தாறுமாறாக ஓடிய கார் சாலையோரம் நடந்து சென்ற தீபிகா என்ற 11 வயது சிறுமியின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விசாரணையில் அந்த காரை ஓட்டியது 15 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது.



திருப்பூர்: தாராபுரம் அருகே 15 வயது சிறுவன் தாறுமாறாக காரை ஓட்டி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாலையோரம் நடந்து சென்ற 11 வயது சிறுமி பலியானார்.

தேனி மாவட்டம் ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆதிநாராயணன்(48) - கோமதி(40) தம்பதி. இவர்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர் திருப்பூர் மாவட்டம் கோவில்வழி அருகேயுள்ள கந்தசாமி தோட்டம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர் தனது வீட்டின் அருகிலுள்ள தாராபுரம் முக்கிய சாலையில் உணவகம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று மாலை வீட்டில் இருந்து உணவகத்திற்கு செல்ல ஆதிநாரயணனின் 3 வது மகள் தீபிகா (11) நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று சாலையில் தாறுமாறாக ஓடி சிறுமியின் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சிறுமி மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.



இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்தார்.



காரை ஓட்டிச் சென்ற சிறுவன் அங்கிருந்து தப்பியதாக கூறப்பட்ட நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நல்லூர் போலீசார் சிறுமியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காரின் பதிவு எண் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், அந்த காரின் உரிமையாளார் ஈஸ்வரன் என்பதும், அவரது 15 வயது மகன் காரை தாறுமாறாக ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...