மே தினம் - கோவையில் தொழிற்சங்கங்கள் சார்பில் பேரணி

கோவையில் சிந்தாமணி முதல் காமராஜ்புரம் வரை இடதுசாரி அமைப்பைச் சார்ந்த தொழிற்சங்க பிரதிநிதிகள், உறுப்பினர்கள் மே தினத்தை முன்னிட்டு பேரணியாக சென்றனர்.



கோவை: கோவையில் மே தினத்தை முன்னிட்டு தொழிற்சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது.

உலகம் முழுவதும் மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினமாக கொண்டாடுகின்றனர். தொழிலாளர்களின் உரிமைக்காக போராடிய தியாகிகளின் நினைவுகளை போற்றும் விதமாக இன்றைய தினம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கோவையில் சிந்தாமணி முதல் காமராஜ்புரம் வரை இடதுசாரி அமைப்பைச் சார்ந்த தொழிற்சங்க பிரதிநிதிகள், உறுப்பினர்கள் பேரணி நடத்தினர்.



இதில் எட்டு மணி நேர வேலைக்காக போராடிய தொழிலாளர்கள், தொழிலாளர்களின் உரிமைக்காக போராடிய தியாகங்கள் உள்ளிட்டவற்றை போற்றி முழங்கினர்.



தொழிலாளர்களின் உரிமை ஒருபோதும் பறிபோகக் கூடாது என்றும் ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்கள் தொழிலாளர்களின் விரோத போக்கை கடைபிடிக்க கூடாது எனவும் கேட்டுக் கொண்டனர்.



தொழிலாளர்களின் நலம் சார்ந்து பல்வேறு நடவடிக்கைகளையும் திட்டங்களையும் கொண்டு வர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.



இந்தப் பேரணியில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று பேரணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...