திருப்பூரில் நுகர்பொருள் வாணிப கழக அங்காடிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு, பாஜக வழியை பின்பற்ற கூடாது, சுமை தூக்குவோர் பணியை ஒப்பந்த முறையில் அவுட் சோர்சிங் விடக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஜனநாயக அங்காடிகள் மற்றும் பொது தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு, பாஜக வழியை பின்பற்ற கூடாது. டி.என்.சி.எஸ்.சி நிர்வாகம் சுமைப்பணி தொழிலாளர்களை கழக பணி விதிகளில் சேர்த்திட வேண்டும், சுமை தூக்குவோர் பணியை காண்ட்ராக்ட் முறையில் அவுட் சோர்சிங் விடக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஜனநாயக அங்காடிகள் மற்றும் பொது தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...