பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் வசந்தகால மலர் வழிபாடு - பட்டிநாயகர் சைவ நெறி அறக்கட்டளை ஏற்பாடு!

கோவையில் பிரசித்திபெற்ற பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலில் பட்டிநாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பில் வசந்தகால மலர் வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு பட்டீஸ்வரரை தரிசனம் செய்தனர்.



கோவை: கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று.

இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பட்டிநாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பாக மலர் வழிபாடு நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்று பிரச்சனை காரணமாக நடைபெறமால் இருந்த மலர் வழிபாடு இந்த ஆண்டு வெகு சிறப்பாக தொடங்கியது.



கோடை காலம் முடிந்து வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக அர்த்த கால பூஜையாக இந்த பூஜை நடைபெற்றது. இதில், சுமார் 400 கிலோ அளவிலான அரிய வகை மலர்களை கொண்டு சிறப்பு மலர் வழிபாடு செய்யப்பட்டது.



தாமரை, அரளி, செண்பகம், பாரிஜாதம், வாடாமல்லி, வெச்சி, மருகு, மரிக்கொழுந்து, என 48 வகை மலர்களை கொண்டு மூலவரான சிவனுக்கு மலர் வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்றது.



பட்டிநாயகர் சைவநெறி அறக்கட்டளை தலைவர், முனைவர் இலட்சுமிபதிராசு தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...