கோவையில் மே தினக் கொண்டாட்டம் - ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்!

மே தினத்தையொட்டி, கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட சோமையம்பாளையம், தடாகம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, குருடம்பாளையம் மற்றும் அசோகபுரம் ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபா கூட்டம் நடைபெற்றது.



கோவை: தமிழகம் முழுவதும் நேற்று மே தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபாக் கூட்டம் நடைபெற்றது.

அதன்படி, சோமையம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்திற்கு தலைவர் ரங்கராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் புனிதவதி கிட்டு முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் முறையான குடிநீர் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டது. இறுதியில் செயலர் செழியன் நன்றி கூறினார்.

சின்னதடாகம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபா கூட்டத்திற்கு தலைவர் செளந்திரவடிவு ஆனந்தன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் விவசாய கடன் குறித்து விவாதிக்கப்பட்டது.



இந்த கூட்டத்தில் துணைத்தலைவர் கோபால், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர். இறுதியில் செயலர் கார்த்திக் நன்றி கூறினார்.

நஞ்சுண்டபுரம் ஊராட்சியில் தலைவர் கார்த்திகேஷ்வரி சுந்தரராஜ் தலைமையில் கிராமசபா கூட்டம் நடைபெற்றது. துணைத்தலைவர் திருநாவுக்கரசு அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த கூட்டத்தில் விவசாய கடன் குறித்து விவாதிக்கப்பட்டது. ஒன்றிய பற்றாளர் வனிதா உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.



பன்னிமடை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபா கூட்டத்திற்கு ரத்தினம் மருதாசலம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அருள்குமார் முன்னிலை வகித்தனர். பன்னிமடை பகுதியில் அதிகமாக குதிரைகள் நடமாடுவதை கட்டுபடுத்த சிறப்பு தீர்மானம் போடப்பட்டது.

இந்த கூட்டத்தில் ஒன்றிய அதிகாரிகள், தடாகம் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.



குருடம்பாளையம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் டி.ரவி தலைமை தாங்கினார். ஊராட்சித்துணைத்தலைவர் வசந்தாமணி, மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் தூய்மையான ஊராட்சியை உருவாக்க உறுதிமொழி எடுத்தக்கொள்ளப்பட்டது. இறுதியில் செயலர் சண்முகராஜ் நன்றி கூறினார்.



அசோகபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபா கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சண்முகசுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் கலாசாந்தாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் 2023-24 ஆண்டிற்கான வீட்டு வரி, தண்ணீர் வரி, தொழில் வரி, உரிமக்கட்டணம் உள்ளிட்டவைகளை 60 சதவீதம் உயர்த்த சிறப்பு திர்மானம் போடப்பட்டது. இறுதியில் செயலர் லீலாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...