கேரளாவிலிருந்து கடத்தி வந்த கஞ்சா பறிமுதல் - கோவையில் 2 பேர் கைது

கோவை ஆனைகட்டி சோதனைச் சாவடி அருகே கேரள மாநிலம் கோட்டத்துறையில் இருந்து கடத்திவரப்பட்ட கஞ்சாவை தடாகம் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முத்துராஜ் மற்றும் ரஞ்சித் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


கோவை: கோவை தடாகம் காவல் எல்லையில் கஞ்சா விற்பனையை தடுக்கும் நோக்கில் தடாகம் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, ஆனைகட்டி சோதனைச் சாவடி அருகே தடாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுக நயினார் மற்றும் காவலர்கள் ஜனா, ராமு, வசந்த் உள்ளிட்ட காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கேரள மாநிலம் கோட்டத்துறையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் விற்பனைக்காக கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அவர்கள் இருவரும் கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் மற்றும் சத்தியமங்களத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பது உறுதியானது. இதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும், அவர்கள் விற்பனைக்காக கடத்தி வந்த கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...