பானிபூரியில் உப்பில்லை எனக் கூறி மதுபோதையில் தகராறு - பல்லடத்தில் பேக்கரி மீது பெட்ரோல் குண்டுவீச முயற்சித்த 4 பேர் கைது!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெருந்தொழுவு என்ற இடத்தில் பானிபூரியில் உப்பு இல்லை எனக் கூறி பேக்கரி உரிமையாளரிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட 4 பேர், பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச முயன்றதால் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: பல்லடம் அருகே கொடுவாய் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். இவர் பெருந்தொழுவு என்ற இடத்தில் பத்து வருடங்களாக பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார்.

நேற்று திருப்பூரை சேர்ந்த அஸ்வின்,பூவலிங்கம், தினேஷ்குமார் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சக்தி கணேஷ் ஆகியோர் சதீஷின் பேக்கரிக்கு மது போதையில் வந்துள்ளனர்.

நான்கு பேரும் பானி பூரி ஆர்டர் செய்து சாப்பிட்டு உள்ளனர். பானிபூரியில் உப்பு இல்லை என கூறி பேக்கரி உரிமையாளர் சதீஷிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பானிபூரி தட்டை தூக்கி வீசிவிட்டு தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து சென்றுள்ளனர்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்த நால்வரும், காலி மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி பேக்கரி மீது வீசி உள்ளனர். பெட்ரோல் குண்டு வெடிக்காத நிலையில் அங்கிருந்து நால்வரும் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.



இது தொடர்பாக சதீஷ்குமார் அவிநாசி பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர்.

கைதானவர்களில் திருப்பூரை சேர்ந்த தினேஷ்குமார் என்பவன் மீது ஏற்கனவே ஆறு வழக்குகள் உள்ளன. பானிபூரியில் உப்பு இல்லை எனக் கூறி பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற போதை ஆசாமிகளால் பெருந்தொழுவு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...