கோவை இதயங்கள் அறக்கட்டளை ஆண்டு விழா - நன்கொடையாளர்கள் கவுரவிப்பு!

கோவையில் இதயங்கள் அறக்கட்டளையின் 6வது ஆண்டு விழாவில் சர்க்கரை நோய் பாதித்த குழந்தைகளுக்கு உதவி வரும் இதயம் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.


கோவை: கோவையை மையமாக கொண்டு தமிழகம் முழுவதும் முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குழந்தைகளுக்கு மருத்துவ உதவி மற்றும் உபகரணங்களை இலவசமாக வழங்கி வரும் ‘இதயங்கள் அறக்கட்டளை’-யின் 6ம் ஆண்டு விழா கோவை சிட்ரா அரங்கத்தில் நடைபெற்றது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டிய நன்கொடையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.



விழாவில் பேசிய அறக்கட்டளை நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதன், ‘‘கடந்த, 2017ல், 10 குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட‘இதயங்கள் அறக்கட்டளை’ இன்று, 1,100 குழந்தைகளுக்கு உதவி வருகிறது. தமிழகத்தில் மட்டும், 20 ஆயிரம் குழந்தைகள் முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் தொடர்ந்து செய்து தரப்படும், என்றார்.

தொடர்ந்து பேசிய எழுத்தாளர் வரலொட்டி ரெங்கசாமி, முதல் வகை சர்க்கரை நோய் உள்ள இந்த குழந்தைகளையும், அவர்களை பெற்றவர்களையும் காக்கும் கடமையை கொண்ட அரசும், இந்த சமுதாயமும்கூட இதயங்கள் அறக்கட்டளைக்கு கடன்பட்டிருக்கிறது.

மருத்துவர்களிடம் இந்த சமுதாயத்துக்கு நல்லது செய்யும் எண்ணம் இருக்கிறது. இருப்பினும் நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகள் காரணமாக, பலரால் இதுபோன்ற உதவியை செய்ய முடிவதில்லை. ‘இதயங்கள் அறக்கட்டளையினர் துன்பம் என்று வந்தவர்களை அன்புடன் அரவணைத்து, உதவி செய்து அவர்கள் துன்பத்தை போக்குகின்றனர். அவர்கள் பணி உன்னதமானது, என்றார்.



இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளும், பெற்றோரும் தங்களுக்கு நிழலாக இருந்து உதவிக்கரம் நீட்டும் நன்கொடையாளர்களின் கால்களை தொட்டு வணங்கி, கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தது காண்போரை நெகிழ வைத்தது.

இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் ‘ராசி சீட்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், புரொப்பெல் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் வித்யா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...