தீவிரவாத நடவடிக்கைகளை தடுப்பது எப்படி..? - கோவையில் போலீசாருக்கு பயிற்சி

கோவை மாநகர நுண்ணறிவு போலீசார் சார்பில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உளவு பிரிவு போலீசாருக்கான பயிற்சி முகாம், கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தீவிரவாத நடவடிக்கைகளை கண்காணிப்பது, தடுப்பது மற்றும் வழக்குகளை கையாள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.



கோவை: கோவை மாநகர நுண்ணறிவு போலீசார் சார்பில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.



மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் மாநகர காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், உளவு பிரிவு போலீசார் கலந்து கொண்டனர்.

இதில் தீவிரவாத நடவடிக்கைகளை கண்காணிப்பது, தடுப்பது மற்றும் வழக்குகளை கையாள்வது குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டது.



பயிற்சி முகாமில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:

தீவிரவாதம் என்பது ஒரு மக்களுக்கு எதிராவும், அரசுக்கு எதிராகவும் வரும், ஒரு சில வேண்டுமென்றே தீவிரவாதத்தை உருவாக்குகின்றனர். இதனை முறையாக நாம் கையாள வேண்டும்.

பொதுமக்கள் கொடுக்கும், புகார் மனுக்களில் எந்த ஒளிவு மறைவும் இருக்க கூடாது. நியாயமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். காவலர் சிலர் தவறான முறையில் வார்த்தை விடுகின்றனர், அவற்றை சரிசெய்து கொள்ள வேண்டும்.

வாகன சோதனையில் ஈடுபடும் காவலர்கள், சோதனைக்கு பின் மக்களிடம் ஒத்துழைப்புக்கு நன்றி செல்ல வேண்டும் இது மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும். இதனை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் இதனை முழுமையாக கடை பிடிக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...