மதம் மாறிய பட்டியலினத்தவருக்கு சலுகைகள் அளிப்பதில் மறுபரிசீலனை அவசியம்..! - காடேஸ்வரா சுப்பிரமணியன் வலியுறுத்தல்

தமிழகத்தில் கிறிஸ்துவ மதம் மாறிய பட்டியல் இனத்தவர்களுக்கும் சலுகைகள் அளித்தால், பட்டியல் இனத்தவர் தங்களது உரிமைகளை இழக்க நேரிடும். இதுகுறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று, தாராபுரத்தில் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாஜகவினருக்கும் இந்து மக்கள் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பிரச்சினை எழுந்தது.

இது பற்றி விசாரித்து அறிந்து கொள்ளவும் இந்து முன்னணிக்கும் நடந்த பிரச்சனைக்கும் தொடர்பு இல்லை என்ற விளக்கம் அளிக்கவும் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தாராபுரம் வந்தார்.



பின்னர் தாராபுரம் இந்து முன்னணி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது:

இந்து மக்கள் கட்சிக்கும் பாஜகவுக்கும் ஏற்பட்ட பிரச்சனை. இந்து மக்கள் கட்சிக்கும் பாஜகவுக்கும் அரசியல் ரீதியாக சம்பந்தம் இல்லை. அது அர்ஜுன் சம்பத் என்ற தனி ஒருவரது கட்சி. இதே வேளையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பாஜகவுக்கும் இந்து முன்னணி தொண்டர்களுக்கும் இடையே கோஷ்டி மோதல் என்பது போன்ற தவறான செய்தியை கூறியிருக்கிறார்கள்.

அதே வேளையில் மற்ற செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகளில் சரியான தகவலை கூறி இருக்கிறார்கள். எனவே தவறான தகவலை வெளியிட்ட அந்த தனியார் தொலைக்காட்சி மறுப்பு தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும்.

மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைபோல் வழங்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இதில் இந்து முன்னணி என்ன சொல்கிறது என்றால், பட்டியல் இன மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் பறிபோகின்றது. இதை அந்த கூட்டணியில் இருக்கின்ற பட்டியல் இனத்திற்காக போராடக்கூடிய திருமாவளவன் கட்சி கண்டிக்க வேண்டும்.

மதம் மாறியவர்கள் எப்படி பட்டியல் இனத்துடன் வருவார்கள் ? இங்கு தான் தீண்டாமை உள்ளே வருகிறது. மதம் மாறிய அவர்களை உயர்த்த வேண்டும் என்று இட ஒதுக்கீடு இருக்கிறது. பட்டியல் இன மக்களுக்கு வருகின்ற சலுகை பறிபோகின்றது. அதை தடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.

மதமாற்றம் பல்வேறு இடங்களில் நடந்து கொண்டு தான் உள்ளது. இதை அரசாங்கமே சொல்கின்றது. சபாநாயகர் மற்றும் முதலமைச்சர் சொல்லுகின்றனர் நாம் அனைவரும் ஒரு நாட்டினுடைய மக்கள். இதை நாம் தமிழரும், திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்களும் பிரிக்கிறார்கள்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் வெளிநாட்டில் வேலை செய்கின்றனர். இவர்களைபோல் அங்கே இருக்கும் தமிழர்களுக்கு இடையூறு செய்தால் என்ன செய்வார்கள்? எப்படி ஆதரவு கொடுப்பார்கள்? நாங்கள் திருப்பூரில்கூட அதே போன்று வரும்போது வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழக தொழிலாளர்களையும் ஒருங்கிணைத்து உங்களுக்கு பாதுகாப்பு நாங்கள் தருகிறோம். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

இந்து முன்னணி அனைத்து மாநிலத்திலும் உள்ளது. தமிழர்களுக்கும் பாதுகாப்பு பாதுகாப்பு வழங்க வேண்டும். திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் ஒரு ஜாதி கலவரத்தை தூண்ட வேண்டும் என்பதற்காக மாநில கலவரத்தை தூண்ட வேண்டும் என்பதற்காகவும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

பாராளுமன்றத் தேர்தலில், இந்துக்களுக்கு யார் ஆதரவாக செயல்படுகிறார்களோ எங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம்.

அதிமுக, பாஜகவும் இரண்டும் ஒன்றாக அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். எடப்பாடி பழனிச்சாமிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. சுமூகமாகதான் உள்ளது. கூட்டணி தொடரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...