பொள்ளாச்சி அருகே விபத்தில் இளைஞர் பலி - விபத்துக்கு காரணமான தடுப்பை அகற்றக்கோரி சாலை மறியல்!

பொள்ளாச்சி - உடுமலை சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் சாலை தடுப்பு கம்பியில் மோதி விக்னேஷ் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், விபத்திற்கு காரணமான சாலை தடுப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: பொள்ளாச்சி - உடுமலை சாலையில் இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகேயுள்ள சூளேஸ்வரன்பட்டி பகுதி சேர்ந்தவர் இளைஞர் விக்னேஷ். இவர் பொள்ளாச்சி - உடுமலை சாலை நல்லம்பள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் இன்று மதியம் தொழிற்சாலை வேலை சம்பந்தமாக பொள்ளாச்சி வந்துவிட்டு மீண்டும் நல்லாம்பள்ளியில் உள்ள தொழிற்சாலை நோக்கி இருசக்கர வாகனத்தில் விக்னேஷ் சென்று கொண்டிருந்தார்.

அப்போது உடுமலை சாலை சின்னம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த டிப்பர் லாரி விக்னேஷ் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இடது புறமாக இருந்த தடுப்புக் கம்பியில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,



இதனிடையே பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை நடுவே இரும்பு தடுப்பு கம்பியால் விபத்துக்கள் அதிகரித்து வருவதால், விபத்துக்கு காரணமாக இருக்கும் இரும்பு தடுப்புக்கம்பியை அகற்ற வலியுறுத்தி சின்னாம்பாளையம் பகுதி சேர்ந்த பொதுமக்கள் திடீரென உடுமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.



இதனால் பொள்ளாச்சி - உடுமலை சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து, விபத்துக்கு காரணமாக உள்ள இரும்பு தடுப்பு கம்பியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...