பூஜ்ய மதிப்பு திட்டத்தை ரத்து செய்யக் கோரி தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்!

தாராபுரத்தில் உழவர்களின் உரிமைபெற்ற இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் பட்டா வழங்கப்பட்ட நிலங்களை சட்டவிரோதமாக இந்து அறநிலைத்துறையும், வக்பு வாரியமும் உரிமை கோரி பூஜ்யம் மதிப்பு செய்யும் திட்டத்தை ரத்து செய்யகோரி தாராபுரத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக சென்று கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே உழவர்களின் உரிமை பெற்ற இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் பட்டா வழங்கப்பட்ட நிலங்களை சட்டவிரோதமாக பூஜ்ய மதிப்பு செய்வதை ரத்து செய்ய கோரி விவசாயிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம், தமிழ்நாட்டில் சிறு இனாம்கள் ஒழிப்பு சட்டம் -1963 இயற்றப்பட்டு அதற்கென செட்டில்மென்ட் தாசில்தார்கள் நியமிக்கப்பட்டு உரிய விசாரணைக்கு பிறகு நிலத்தை உழுது கொண்டிருந்த உழவர்களுக்கு ரயத்துவரி பட்டா வழங்கபட்டன.

இந்த நிலையில் அந்த நிலங்களை பத்திரபதிவு துறையும், வக்பு வாரியமும் இணைந்து சட்டவிரோதமாக ஆவணங்களில் பூஜ்ஜியம் மதிப்பு செய்ய துவங்கி உள்ளனர். சிறு, குறு விவசாயிகளை பாதிக்கும் இச்செயலை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை 12 லட்சம் ஏக்கர் நிலங்களையும் வக்பு வாரியம் 78 ஆயிரம் ஏக்கர் நிலங்களையும் பத்திரபதிவு துறை மூலமாக பூஜ்ஜியம் மதிப்பு செய்யும் செயல் விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.



எவ்வித அரசாணையும் இல்லாமல், நீதிமன்ற உத்தரவும் இல்லாத நிலையில் இந்த நில அபகரிப்பை உடனடியாக கைவிட கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்த்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதோடு பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் அரசு இந்த சட்டவிரோத செயலை தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகளை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தபோவதாக எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...