பல்லடம் அரசு மருத்துவமனை வாயிலில் அடியோடு பெயர்ந்து விழுந்த மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நோயாளிகள்!

பல்லடம் அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் இருந்த 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த காட்டு பூவரசன் மரமானது நேற்றைய தினம் பெய்த மழையின் காரணமாக அடியோடு பெயர்ந்து விழுந்த நிலையில், நல்வாய்ப்பாக அங்கு யாரும் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பெயர்ந்து விழுந்த மரத்தை அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர்: பல்லடம் அரசு மருத்துவமனை வாயிலில் இருந்த பூவரசன் மரம் அடியோடு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்கு தினசரி ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் 30க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுவதால் 60க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றன. இந்த நிலையில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியை இறக்கிவிட்டு விட்டு நுழைவு வாயில் அருகே நின்றது.



அப்போது, நுழைவு வாயிலில் உள்ள 60 ஆண்டுகள் பழமையான காட்டு பூவரசன் மரம் திடீரென அடியோடு பெயர்ந்து விழுந்தது.



மரம் பெயர்ந்து விழுந்த இடத்தில் நோயாளிகள் செவிலியர்கள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை.



இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் தீயணைப்பு துறை வீரர்கள் வேரோடு சாய்ந்த மரத்தினை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



மேலும் அரசு மருத்துவமனைக்குள் 50க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ள நிலையில் பழமையான மரங்கள் பட்டு போய் வேரோடு சாயும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

திடீரென பழமையான மரம் வேரோடு சாய்ந்த சம்பவம் பல்லடம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...