துடியலூர் சுற்றுவட்டாரத்தில் வெளுத்து வாங்கிய கனமழை - சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்!

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை தொடர்ந்து 2 மணி நேரம் விடாமல் பெய்த கனமழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வந்த நிலையில், சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.


கோவை: துடியலூர் சுற்று வட்டார பகுதிகளில் இன்று மாலை பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வரும் 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கோவையில் காலை முதல் வெயில் அடித்த நிலையில் பிற்பகலுக்கு பிறகு வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.



தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், இடிகரை, ஜி.என்.மில்ஸ், இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது.



கனமழை காரணமாக குலிர்ச்சியான சூழல் நிலவி வரும் நிலையில், மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...