கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் ஆய்வு!

கோவை வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் குறித்து ஆய்வு மேற்கொண்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார், மழைநீர்‌ வடிகாலில்‌ உள்ள செடி கொடிகளை போர்கால அடிப்படையில்‌ உடனடியாக அகற்றி தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சியில் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



கோவை‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண் 18க்கு உட்பட்ட நல்லாம்பாளையம்‌ பகுதியில்‌ உள்ள மழைநீர்‌ வடிகாலை மேயர் கல்பனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, போர்கால அடிப்படையில்‌ தூர்வாரி உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.

மேலும்‌, அப்பகுதியில்‌ உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும்‌, பொது கழிப்பறை கட்டிடத்திற்கு, உரிய இடத்தினை தேர்வு செய்து, திட்ட மதிப்பீடு தயார்‌ செய்திடவும்‌ சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்‌.



இதனை தொடர்ந்து, வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.19க்கு உட்பட்ட மணியகாரம்பாளையம்‌ பகுதியில்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து கால்வாயில்‌ உள்ள செடி கொடிகளை அகற்றி தூர்வாரி கழிவுநீர் சீராக செல்ல நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.



பின்னர்‌, வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.30க்கு உட்பட்ட கணபதி பகுதியில்‌ உள்ள மழைநீர் வடிகாலினை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, மழைநீர் வடிகாலில்‌ உள்ள செடி, கொடிகளை உடனடியாக அகற்றி தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலருக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌ உத்தரவிட்டார்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...