திடீர் கனமழையால் கவுண்டம்பாளையம் அருகே மேம்பாலத்தின் அடியில் சிக்கிய மினி பேருந்து - பரபரப்பு!

கோவை மாநகரில் இன்று மாலை பெய்த திடீர் கனமழையின் காரணமாக கவுண்டம்பாளையம் அருகே மேம்பாலத்திற்கு அடியில் மழைநீர் தேங்கி நின்ற நிலையில் அவ்வழியாக சென்ற மினி பேருந்து ஒன்று அங்கேயே சிக்கிக் கொண்டது. மழை நீர் அகற்றப்பட்ட பின்னரே பேருந்து மீட்கப்படும் என அதிகாரிகள் தகவல்.


கோவை: கவுண்டம்பாளையம் அருகே திடீர் கனமழையின் காரணமாக மேம்பாலத்திற்கு அடியில் தேங்கி நின்ற மழைநீரில் மினி பேருந்து ஒன்று சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகரில் உக்கடம், கவுண்டம்பாளையம், காந்திபுரம் ஆகிய பகுதிகளில் இன்று மாலை 5 மணியளவில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

சில இடங்களில் மழை நீர் தேங்கி நின்றதால் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.



இந்த நிலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் மழை நீர் தேங்கி நின்றதால் அவ்வழியாக வந்த மினி பேருந்து ஒன்று கவுண்டம்பாளையம் மேம்பாலத்திற்கு அடியில் சிக்கிக் கொண்டது.

தொடர்ந்து மழை பெய்து வந்ததால், பேருந்து ஓட்டுநர் வெளியே வந்தார்.



முன்னதாக மழையின் வேகம் அதிகரித்தால் உடனடியாக போக்குவரத்து நிறுத்தும் பணிகள் நடைபெற்றது. இதனிடையே வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்றும் மீட்க முடியாததால், மழை நீர் அகற்றப்பட்ட பிறகு மினி பேருந்தை வெளியே எடுக்கும் பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...