கோவையில் இளைஞர்களை குறிவைத்து உயர்ரக போதைப்பொருள் விற்பனை - கல்லூரி மாணவரை கைது செய்த தனிப்படை!

கோவையில் இளைஞர்களை குறிவைத்து methamphetamine என்ற உயர்ரக போதை பொருள் விற்பனை நடைபெற்று வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்ட தனிப்படை போலீசார், கேரள மாநிலத்தை சேர்ந்த அகில் என்ற கல்லூரி மாணவரை கைது செய்து அவரிடம் இருந்து 6 கிராம் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவையில் இளைஞர்களை குறிவைத்து methamphetamine என்ற உயர்ரக போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த வெள்ளகிணறு பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு அருகே உயர்ரக போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக துடியலூர் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

மேலும் காளப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஒருவர் தனது whatsapp மூலம் இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இந்த ரகசிய தகவல்களின் அடிப்படையில், போலீசார் கல்லூரி மாணவரை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அந்த மாணவர் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்த போது தனிப்படை போலீசார் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

விசாரணையில் பிடிபட்ட நபர் கேரள மாநிலம் கோழிக்கோடு அடுத்த ராவணூரை சேர்ந்த ஜெயபால் என்பவரது மகன் அகில் (26) என்பது தெரியவந்தது. இவர் காளப்பட்டியில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், மாணவர் அகில் பெங்களூரை சேர்ந்த ரோகித் என்பவர் மூலம் methamphetamine என்ற போதை மாத்திரையை கோவைக்கு வாங்கி வந்து கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 6 கிராம் உயர்ரக போதை பொருளாக methamphetamine போதை பொருளை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டத்தில் இதுவரை உயர் ரக போதை பொருட்கள் விற்பனை செய்வதாக ஐந்து நபர்கள் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மொத்தம் 23 கிராம் எடையுள்ள methamphetamine போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...