கோவையில் தனியார் நிறுவன ஊழியரின் பைக் திருட்டு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை அரசூர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் விஷ்ணுவர்தன் என்பவரின் இருசக்கர வாகனத்தை, மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் திருடிச் சென்றார். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.



கோவை: கோவை அரசூர் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணுவர்தன். தனியார் நிறுவன ஊழியரான இவர், ஜெராக்ஸ் எடுப்பதற்காக ஒண்டிப்புதூர் பள்ளி அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றார்.

ஜெராக்ஸ் எடுத்துவிட்டு ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்து பார்த்தபோது, அவரது வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிக்கொண்டு தப்பியோடினார்.



இதனால் அதிர்ச்சியடைந்த விஷ்ணுவர்தன், திருட்டு தொடர்பாக சிங்காநல்லூர் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் பைக் கொள்ளையில் ஈடுபட்ட நபரைத் தேடிவருகின்றனர்.

இந்த பைக் திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...