கோவையில் கனமழை காரணமாக மேம்பாலங்களுக்கு அடியில் தேங்கிய கழிவுகளை அகற்றும் பணிகள் தீவிரம்!

கோவையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், மேம்பாலங்களுக்கு அடியில் அதிகளவிலான கழிவுகள் தேக்கமடைந்துள்ள நிலையில் அதனை அகற்றும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



கோவை: கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மேம்பாலங்களுக்கு அடியில் தேங்கியிருக்கும் கழிவுகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றைய தினம் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீருடன் சாக்கடை நீரும் சேர்ந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.



குறிப்பாக கோவை மாநகரில் அவிநாசி சாலை மேம்பாலம், வடகோவை மேம்பாலம், லங்கா கார்னர், கிக்கானிக் பள்ளி அருகில் உள்ள மேம்பாலங்களுக்கு அடியில் மழைநீருடன் சேர்ந்து, சாக்கடை நீரும் தேங்கி நின்றதால் மேம்பாலங்களுக்கு அடியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்றிரவு அந்த மழை நீரை அகற்றும் பணிகளை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர்.



தற்போது மேம்பாலத்திற்கு அடியில் தேக்கமடைந்து இருக்கும் மண் மற்றும் கழிவுகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். அனைத்து மேம்பாலங்களிலும் கழிவுகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



இந்த பணிகள் காரணமாக மேம்பாலங்களுக்கு அடியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...