கோவையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 100 சவரன் நகைகள், ரூ.2.5 கோடி பணம் கொள்ளை - 3 பேர் கைது!

கோவை ராமநாதபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 100 சவரன் நகைகள் மற்றும் ரூ.2.5 கோடி பணம் கொள்ளையடித்துவிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த அருண்குமார், பிரவீன் மற்றும் சுரேந்தர் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: ராமநாதபுரம் அருகே மூதாட்டியின் வீட்டில் இருந்த 100 சவரன் நகைகள் மற்றும் ரூ.2.5 கோடி பணத்தை கொள்ளையடித்து சென்ற மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் ராமநாதபுரம் அடுத்த புலியகுளம் சாலை கிரீன் பீல்ட் காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன்.



இவரது மனைவி ராஜேஸ்வரி (63) தனியாக வசித்து வருகிறார், ராஜேஸ்வரி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில் சிங்காநல்லூரை சேர்ந்த வர்ஷினி என்பவர் பழக்கமாகியுள்ளார். இதனால் அடிக்கடி வர்ஷினி, ராஜேஸ்வரியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி ராஜேஸ்வரியின் வீட்டிற்கு வந்த வர்ஷினி, தனது நண்பர்கள் மற்றும் கார் ஓட்டுநர் மூலமாக ராஜேஸ்வரியின் வீட்டில் இருந்த சுமார் 100 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகள் சுமார் ரூ.2.5 கோடி பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து, ராஜேஸ்வரி ராமநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான வர்ஷினி மற்றும் அவரது நண்பர் அருண்குமார் உள்ளிட்டோரின் செல்போன் எண்களை வைத்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் அருண்குமார் மற்றும் அவருக்கு உதவிய பிரவீன், சுரேந்தர் ஆகியோர் திருவள்ளூர் மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, திருவள்ளூர் அடுத்த காட்டூர் கிராமத்திற்கு சென்ற தனிப்படை போலீசார் அங்கிருந்த அருண்குமார், பிரவீன் மற்றும் சுரேந்தர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்த ரூ.2 லட்சம் பணம் மற்றும் ஆறு ஜோடி தங்க வளையல்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அருண்குமாரின் நண்பர் கார்த்திக் என்பவரிடம் கொடுத்து அனுப்பிய ரூ. 31 லட்சம் சேலம் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் மாட்டி கொண்டதாகவும், கூடுதல் நகைகளை வேறு ஒரு நண்பரிடம் கொடுத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...