பல்லடத்தில் மின்கம்பம் அருகே கட்டப்படும் பொதுக் கழிவறை - விபத்து ஏற்படுமோ என பொதுமக்கள் அச்சம்!

பல்லடம் அடுத்த பெரியார் நகர் பகுதியில் ஏற்கனவே இருந்த பொதுக்கழிவறை சிதிலமடைந்ததால், அதன் அருகே கட்டப்படும் புதிய கழிவறைக்கு மத்தியில் உள்ள உயரழுத்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும் இல்லையென்றால், கழிவறையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே மின்கம்பத்திற்கு அருகே அமைக்கப்படும் பொதுக்கழிவறையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 41 வது வார்டு பெரியார் நகர் பகுதியில் ஏற்கனவே இருந்த பொதுக்கழிவறை இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் பழைய கழிவறைக்கு அருகாமையில் புதியதாக கழிவறை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், கழிவறையின் மத்தியில் உயரழுத்த மின்கம்பம் உள்ளதால், மின்கம்பத்தை அகற்றிவிட்டு கட்டிட பணி மேற்கொள்ளப்படாமல் மத்தியில் மின் கம்பம் இருப்பதோடு சேர்த்து கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



இதுதொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது,

2022 ஆம் ஆண்டு வேறொரு இடத்தில் கழிவறை கட்டுவதற்கு பூமி பூஜை போட்ட நிலையில், அதனை தவிர்த்து தற்போது புதிய இடத்தில் கழிவறை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

கழிவறைக்கு மத்தியில் உயர் அழுத்த மின்கம்பம் இருப்பதன் காரணமாக தண்ணீர் பயன்படுத்தக்கூடிய இடத்தில் மின் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படக்கூடிய பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே இதனை கவனத்தில் கொண்டு மின் கம்பத்தை அகற்ற வேண்டும் இல்லையெனில் கழிவறையை மாற்று இடத்தில் கட்ட வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...